முதலீடு நல்லதா கெட்டதா என்ற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் உள்ளது. என்னை பொறுத்த வரையில் பங்குச்சந்தை முதலீடு என்பது பணம் ஈட்டுவதற்கு மிகச்சரியான இடம் என்றே சொல்வேன். எனது பன்னிரண்டு ஆண்டுகால அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் பங்குசந்தையில் மட்டுமே நினைத்த துறையில் முதலீடு செய்ய முடியும்!
“விரலுக்கேத்த வீக்கம்” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தனது தகுதிக்கு தகுந்தாற்போல் முதலீடு செய்யமுடியும்!.
எடுத்துக்காட்டிற்கு ; பெட்ரோலியம் துறையில் தொழில் துவங்க வேண்டுமென்றாள் பல ஆயிரம் கோடி தேவைப்படும் ஆனால் பங்குசந்தையில் ஏற்கனவே அந்த துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் பங்கினை வெறும் 1250 க்கு வாங்கமுடியும். இப்படி உதாரணத்திற்கு ஆயிரம் சொல்லலாம்.
நான் 2012 இல் பார்த்த பங்குகள் இன்று பலமடங்குகள் வருமானம் தந்துள்ளது இது தங்கம் , பேங்க் நிரந்தர வைப்புநிதி ஐ விட பலமடங்கு இலாபம் அதிகம்.
கடந்த பத்து ஆண்டிற்கு முன் இருந்த முதலீட்டர்களை விட இன்று இருக்கும் முதலீட்டார்கள் 5 மடங்கு அதிகம். அந்த அளவிற்க்கு பங்குச்சந்தையின் நம்பகத்தன்மை உயர்ந்துள்ளது.
டீமேட் கணக்கு:
பங்குச்சந்தையில் முதலீடு தொடங்க டீமேட் அக்கௌன்ட் அவசியம். இன்றைய காலகட்டங்களில் டீமேட் கணக்கினை 18 வயது நிரம்பியவர்கள் ஆன்லைன் இல் சேமிப்பு கணக்கு மற்றும் பான் கார்டு அட்டையுடன் இலவசமாக டீமேட் அக்கௌன்ட் தொடங்கலாம். https://upstox.com/open-account/?f=43MK
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றே! ஆனால் அதற்காக மனநிலை தயார் செய்வதுதான் மிக கடினம்.
தொடரும்…
நன்றி !
இப்படிக்கு.,
நல்லசாமி சி
(எம் பி ஏ – பைனான்சியல் மேனேஜ்மென்ட்)
(பங்குச்சந்தை முதலீட்டாளர் & ஆலோசகர்)
இன்வெஸ்ட்டாக்கின் – நிறுவனர்
LIC பாலிசிதாரர்களால் கோரப்படாத ரூ. 880 கோடி!
LIC பாலிசிதாரர்களால் கோரப்படாத ரூ. 880 கோடி உள்ளது: உங்கள் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) 2023-24 நிதியாண்டில் (FY24) கோரப்படாத முதிர்வுத் தொகை ரூ. 880.93 கோடி என்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மொத்தம் 372,282 பாலிசிதாரர்கள் தங்கள் முதிர்வு பலன்களை கோரவில்லை என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். கோரப்படாத எல்ஐசி தொகை என்றால் என்ன? எல்ஐசி பாலிசியில் கோரப்படாத தொகை என்பது…
One response
Very Good Article above investment